ராகம லன்சியாவத்த பிரதேசத்தில் வீடொன்றில் கட்டிலுக்கு கீழாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 10 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 40 வயதான சந்தேகநபர் ஒருவர் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையின் உளவுப்பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நபர் வாடகை அடிப்படையில் குறித்த வீட்டை பெற்று நீண்டகாலமாக இந்த கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
விசேட அதிரடிப்படையின் கோணஹேன முகாம் அதிகாரிகளால் குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 17 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.