ஏழு நாட்களுக்குப் பிறகு பெற்றோருடன் இணைந்த காணாமல் போன சிறுவன்!
கடந்த 24 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த இரத்தினபுாி, மலங்கம, ஆட்டிகல மாவத்தையைச் சேர்ந்த 14 வயதான சிறுவன் நேற்று குருணாகல், ரிதீகம பிரதேசத்திலுள்ள வீதித்தடையொன்றில் நேற்று காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டார்.
அதன்பின்னர், இன்று பிற்பகல் ரிதீகம காவல்நிலையத்தில் வைத்து, சிறுவன் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். இதனையடுத்து, இடைநடுவே சிறுவனுக்கு ஆசி பூஜையொன்றும் மேற்கொள்ளப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

