உலகில் உள்ள எண்ணற்ற தீர்க்கதரிசிகளில் பாபா வாங்காவும் ஒருவர். இவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானது. ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே இவர் கணித்து வைத்துள்ளார்..
பாபா வாங்கா பல்கேரியாவைச் சேர்ந்தவர்.இவரது இயற்பெயர் வங்கெலியா பாண்டேவா திமிட்ரோவா.ஆனால் உலகம் முழுவதும் பாபா வாங்கா என்ற பெயரில் பிரபலமானார்.
1911ஆம் ஆண்டு பிறந்த பாபா வாங்கா, 12 வது வயதில் பார்வையை இழந்ததன் காரணமாக எதிர்காலத்தைப் கணிக்கும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.
இவருடைய கணிப்புகள் இன்றும் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக அமெரிக்காவில் நடந்த தாக்குதல், 2004 சுனாமி, நிலநடுக்கம், பூங்கம்பம், பிரிட்டன் யூரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறல் (Brexit) மற்றும் ரஷ்யா–உக்ரைன் மோதல் போன்றவை பாபா வாங்கா முன்னரே கணித்து வைத்துள்ளார்.
மேலும், பாபா வாங்கா 2025ஆம் ஆண்டுக்காக கூறிய பல கணிப்புகள் ஏற்கனவே நனவாகி விட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இவ்வாண்டு உலகில் பல பகுதிகளில் நிலநடுக்கமும், வெள்ளமும் ஏற்பட்டு உலக அழிவு தொடங்கும் என்றும், பெரிய மோதல்கள், இனக்கலவரங்கள், சோகமான சம்பவங்கள் பதிவாகும் என்றும் பாபா வாங்கா கணித்தார்.
அவர் கணித்தது போன்றே பல்வேறு நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதுடன், மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்தநிலையில், தற்போது பாபா வாங்காவின் தங்க விலை கணிப்புகள் கவனத்தை ஈர்த்துள்ளன.
2025 இல் தங்கம் விலை உச்சத்தை தொட்ட நிலையில், 2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை மேலும் வெகுசாக அதிகரிக்கும் என பாபா கணித்து கூறியுள்ளாராம்.
நடுத்தர வர்க்கத்தினரின் பிரதான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது.
சர்வதேச அளவில் நிலவும் போர்ப் பதற்றம், வரி விதிப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.
இதனால், சாமானியர்கள் தங்கத்தை கொள்வனவு செய்வது எட்டாக்கனியாக மாறியுள்ளது.
2026இல் பெரும் மந்த நிலை அல்லது போர் போன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டால், தங்கத்தின் விலை உண்மையாகவே உயர வாய்ப்பு உள்ளது.
எனினும், பாபா வாங்காவின் கணிப்புகள் ஒரு தீர்க்கதரிசனமான பேச்சாகும். சிலர் அவற்றை யதார்த்தமாக எடுத்துக் கொள்கிறார்கள், ஏனையோர் சீரான சந்தை ஆய்வை முன்னிலைப்படுத்துகிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

