பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து காணாமல்போயிருந்த யுவதியின் சடலம் நேற்று மாலை 7 மணியளவில் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பிரதேச விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
பத்தனை பொலிஸார் மற்றும் இராணுவத்தின் உதவியோடு கடந்த சில தினங்களாக சிறுமியின் சடலத்தை மீட்க பல்வேறு வகையான பணிகளை முன்னெடுத்த போதிலும் அவை கைகூடாத நிலையில் நேற்று சிறுமியின் சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த சடலமானது துர்நாற்றம் வீசும் அதேசமயம் சிதைவடைந்த நிலையில் இருப்பதாகவும் மிக மோசமான நிலையில் நீரில் ஊறிய தன்மையோடு காணப்படுவதாகவும் அதிரடி படையினர் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.