பாதாள உலகக்குழுத் தலைவர் கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பினை பேணிய குற்றச்சாட்டில் கம்பஹா வலய, குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவலின் படி, அண்மையில் இந்தோனேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உட்பட மேலும் நான்கு திட்டமிடப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்களுடன், குறித்த பொலிஸ் அதிகாரி தொடர்பைப் பேணிவந்துள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் அதிகாரி தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அவர்கள் இந்தோனேஷியாவில் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக நாட்டில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை இந்த போதைப்பொருள் உற்பத்திக்கு தேவையான ரசாயனங்களை உள்ளடக்கிய 2 கொள்கலனகள் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி மித்தெனிய பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் அவை அங்கு தரையிறக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது
இந்த இரசாயனங்கள் கொண்டுவரப்பட்டமைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மனம்பேரி சம்பத் தற்போது தலைமறைவாகியுள்ளதுடன் மித்தெனிய பகுதியில் ரசாயனங்களை தரையிறக்கும் போது அவர் அங்கிருந்தமைக்கான சீ சீ டீவி ஆதராங்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் குறித்த ரசாயனங்களின் ஒரு பகுதி நுவரெலியாவில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது
அது தொடர்பான காணொளிகளை அவர் கெஹேல்பத்தரே பத்மே உள்ளிட்ட குழுவினருக்கு அவர் அனுப்பியுள்ளமை தொலைபேசி தரவுகளில் கண்டறியப்பட்டுள்ளது
எனினும் குறித்த ரசாயனங்கள் நுவரெலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் வீதி போக்குவரத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அவை ஹம்பாந்தோட்டை -கொடகம ஊடாக அவை கந்தான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

