கம்பஹா மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள நபர்கள் குழு ஒன்று ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது 10 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பரக்கந்தேனிய, தலுவகொடுவ மற்றும் கட்டான ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி சோதனைகளின் போது, ஒரு ரிப்பீட்டர் வகை துப்பாக்கி, கைத்துப்பாக்கி, ஒன்பது T-56 மெகசின்கள், 183 T-56 தோட்டாக்கள், 280 9 மிமி தோட்டாக்கள், ஒரு வாள் மற்றும் 300 கிராம் ஐஸ் போதைப்பொருள்ஆகியவற்றை பொலிஸார் மீட்டனர்.
இதன்போது, சந்தேக நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு காரையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணேமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

