பல சின்னத்திரைத் தொடர்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் வேணு அரவிந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சின்னத்திரையில் ராதிகாவுடன் வாணி ராணி, அலைகள் உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களில் முன்னணி வேடங்களில் நடித்திருந்தவர் வேணு அரவிந்த்.
இவர் சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு நிமோனியாவால் பாதிக்கப்பு ஏற்பட்டிருக்கிறது. பின்பு அவரது மூளையில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருக்கறது. அப்போது அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.
இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமாக ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.