அம்பாறை மாவட்டத்தின் இங்கினியாகல பகுதியில் மானுக்கு பார்த்த குறி தவறியதில் இராணுவ சிப்பாய் ஒருவர் பலியாகியுள்ளார்.
இதனை அடுத்து 3வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரின் நண்பரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு சந்தேக நபரிடமிருந்து துப்பாக்கி ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது குறித்து தெரியவருவதாவது,
விலங்குகளை வேட்டையாடுவதற்காக மூன்று நண்பர்கள் அம்பாறை – இங்கினியாகல நாமல்தலாவ காட்டுப் பகுதிக்கு இரவு 10.30 மணியளவில் சென்றுள்ளனர்.
இதன் போது மானை பார்த்து நண்பர் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 27 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர் காயமடைந்ததை அடுத்து இங்கினியாகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.