பொலநறுவை – மன்னம்பிட்டியில் இன்று (29)அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாத் தொற்றாளர்களை அழைத்துச் சென்ற இராணுவ பேருந்தும் சுத்திகரிப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஜீப் ரக வாகனமுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த ஜீப்பில் 13 பேர் பயணித்துள்ள நிலையில், அதில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளனர்.