ஒரு கிலோகிராம் சிவப்பு பச்சை அரிசி 88 ரூபாவுக்கு லக் சதொச கிளைகளில் இன்று முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர், குறித்த அரிசியை கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில் வாங்கலாம் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அடுத்த வாரம் முதல் வெள்ளைப் பச்சை அரிசியை லக் சதொசவின் கிளைகளில் ஒரு கிலோகிராம் 92 ரூபாவுக்குப் பெற முடியும் என அமைச்சர் மேலும் கூறினார்.