அத்துருகிரிய பகுதியில், T56 ரக துப்பாக்கிக்காக பயன்படுத்தப்படும் 50 தோட்டாக்கள் மற்றும் ஒரு கூரிய ஆயுதம், பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இவை, கடந்த 12 ஆம் திகதி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்படும் போதே, சந்தேக நபரிடமிருந்து 11 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் (ICE) போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலதிக விசாரணையில், அவரது வசம் இருந்து துப்பாக்கி தோட்டாக்களும் மற்ற ஆபத்தான ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் எனவும், தற்போது அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.