வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் மூழ்கி உயிரிழந்தார்.
நாவலப்பிட்டி, கண்டி பகுதியைச் சேர்ந்தவர். தற்போது வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் உறவினர்களுடன் தற்காலிகமாக வசித்து வருகிறார்.ஒரு வர்த்தக நிலையத்தில் வேலை செய்துவந்துள்ளார்.சம்பவம் நேரத்தில், இவர் தனது உறவினர்களுடன் நீச்சல் தடாகத்துக்குச் சென்றிருந்தார்.
குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி, மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் உள்ள குளிரூட்டி (cold storage) பழுதடைந்ததால், சடலத்தை வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டது.
சடலம் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டியதாக வைத்தியசாலை உத்தரவு. ஆனால், உறவினர்கள் பொருளாதார சிக்கலால் வாகனத்தை வாடகைக்கு அமர்த்த முடியாத நிலை.
தகவலறிந்த ஊடகவியலாளர்கள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன அவர்களின் கவனத்திற்கு இவ்விவரங்களை கொண்டு சென்றனர்.அவர் உடனடியாக வைத்தியசாலையை பார்வையிட்டார், உறவினர்களுடன் கலந்துரையாடினார்,
சடல பராமரிப்பு வைத்தியசாலையின் பொறுப்பு என வலியுறுத்தினார், பிரேத அறை பழுது குறித்து பதில் கோரினார். அதன் பின், வவுனியா வைத்தியசாலை சடலத்தை பொறுப்பேற்று செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அனுப்பியது.
உடற்கூற்று பரிசோதனை ஏப்ரல் 15 நடைபெறும். அதன்பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். வவுனியா பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.