யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இந்நிகழ்வில், யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையின் தரம் 3 மாணவன் சுதர்சன் அருணன் (வயது 5) ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை சிங்களத்தில் சிறப்பாக ஆற்றினார்.
சிறுவனின் சிங்கள மொழிப் பார்வை மற்றும் உரைதிறமை,
நிகழ்வில் கலந்துகொண்டவர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது.விழாவில்,வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால, பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
ஒரு தமிழ் பேசும் மாணவன் சிங்களத்தில் உரையாற்றியமை,
இன ஒற்றுமை மற்றும் மொழி புரிதலின் ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று பலர் பாராட்டுகின்றனர்.இது போன்ற நிகழ்வுகள் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கலாம் என்பதற்கான நல்ல எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.