வவுனியாவின் பல பகுதிகளில் வீதியில் சென்ற பெண்களை பின்தொடர்ந்து, அவர்களின் சங்கிலிகளை பறித்து வந்த சம்பவத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேற்கொண்ட விசாரணையின் போது, சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட மோட்டர் சைக்கிளுடன் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைதான நபர் வவுனியா ஈரப்பெரியகுளம் இராணுவ முகாமில் பணியாற்றும் மிகிந்தலை சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
விசாரணைகளில், கடந்த டிசம்பர் 20 முதல் இம்மாதம் முதலாம் தேதி வரை, ஓமந்தை, வேப்பங்குளம், கூமாங்குளம், நெளுக்குளம் மற்றும் இராசேந்திரகுளம் பகுதிகளில் பெண்களிடமிருந்து பல பவுண் சங்கிலிகள் பறிக்கப்பட்ட சம்பவங்களில் அவர் தொடர்புடையது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கைதானவரிடம் இருந்து அவரது சொந்த மோட்டர் சைக்கிளும், பறிக்கப்பட்ட சங்கிலிகளும் மீட்கப்பட்டுள்ளன.