2023 ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில், முன்னாள் பொலிஸ்மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தேசபந்து தென்னக்கோன் கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து, 20 நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இன்று (10) கடும் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட தேசபந்து, நீதிமன்ற உத்தரவை மதித்து ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இத்துடன், அவரின் வழக்கு தொடர்ந்தும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.