இலங்கையில், இந்த வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் 37,463 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில், அதிகம் மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 30,972 மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
530 கார்கள் , 939 இரட்டை பயன்பாட்டு வாகனங்கள், 610 டிராக்டர்கள், 114 பேருந்துகள், 182 கை டிராக்டர்கள், 104 லாரிகள், 195 முச்சக்கர வண்டிகள்
புதியதாக 247 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயந்திர திறன் கொண்டவை.
கடந்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் எண்ணிக்கை 74,410 ஆக இருந்தது.

