யாழ். வடமராட்சி, நெல்லியடி நகரப் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 25 வயதான இளைஞர், மோட்டார் சைக்கிளில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மந்திகை, மடத்தடிப் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில், இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.படுகாயமடைந்த இளைஞரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.