ஹிக்கடுவை பொலிஸ் பிரிவின் குமாரகந்த பகுதியில் வீதிக்கு அருகிலுள்ள ஆடையகத்திற்கு அருகில் நின்றிருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிக்கடுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிமெல்லகமஹ பகுதியில் வைத்து சந்தேகநபர் கடந்த 07-ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.சந்தேகநபர் 23 வயதுடைய, கோனபீனுவல பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
கடந்த 3-ஆம் திகதி இரவு, ஹிக்கடுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரகந்த பகுதியில் உள்ள வீதிக்கு அருகிலுள்ள ஆடையகம் அருகில் நின்று கொண்டிருந்த பெண் மற்றும் மற்றொரு ஆண் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியனர்.இருவரும் படுகாயமடைந்து கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆண் நபர் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

