கோப்பாய் பகுதியில் கிராம சேவையாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
கோப்பாய் பகுதியில் தனது கடமைகளை மேற்கொண்டு கொண்டிருந்த கிராம சேவையாளரின் பணிக்கு இடையூறு விளைவித்த இருவரையும், அவரது முறைப்பாட்டின் பேரில் கோப்பாய் பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைகள் நிறைவடைந்த பின் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். விசாரணைகளை தொடர்ந்து, நீதிமன்றம் இருவரையும் எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.