நிதி மோசடி குற்றச்சாட்டில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, சிறையில் மெத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
மெத்தை வழங்க மருத்துவ பரிந்துரை அவசியம்,சிறை மருத்துவரிடம் பரிந்துரை கோரப்பட்டபோது அது நிராகரிக்கப்பட்டது,சிறைச்சாலை விதிகளின்படி, மருத்துவ பரிந்துரை இல்லாமல் மெத்தை வழங்க முடியாது.
சிறைச்சாலை நிர்வாகம், சிறை விதிகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதால், இத்தகைய உபகரணங்களை வழங்க தகுந்த காரணம் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
உடல்நலம் தொடர்பான பிரச்சினை காரணமாக தரையில் தூங்குவது கடினமாக இருக்கிறது என அவர் கூறியுள்ளாலும், இதற்கான மருத்துவ பரிந்துரை பெறப்படாததால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

