திருகோணமலை புல்மோட்டை பதவி ஸ்ரீபுர பிரதேச செயலகத்திற்கு நேற்று (26) வருகை தந்த பெண்ணொருவர் அங்குக் காணி பிரிவில் கடமையாற்றும் பெண் அதிகாரி ஒருவரை தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சட்டவிரோதமாக காணியைக் கையகப்படுத்துவதற்காக அதிகாரி ஒத்துழைப்பு வழங்க மறுத்ததன் காரணமாகவே இந்த தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.தாக்குதல் நடத்திய பெண், அதிகாரியிடமிருந்து ஆவணங்களை பலவந்தமாக பெற்றுக்கொள்ள முயன்றதாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட அதிகாரி சிகிச்சைக்காக பதவி ஸ்ரீபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்துக்கு எதிராக, பிரதேச செயலக அதிகாரிகள் அமைதியான முறையில் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, சம்பவத்துக்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.