நேற்று மாலை (27) பெய்த கனமழையால் பல பகுதிகளில் மண்மேடுகள் சரிந்து, முக்கிய வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கெம்பனே,ஓமல்பே,கொடவெல,தாபனே,தொரப்பனே
தொரப்பனே வீதியின் இருபுறங்களிலும் கொடவெல, கெம்பனே பகுதிகளில் மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளன.தொரப்பனேயிலிருந்து ஊருபொக்க செல்லும் வீதியும் மண்ணிடிப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது.
போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டுள்ளதனால், மாறுபட்ட வழிகள் பயன்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.மழை தொடர்ந்து பெய்யும் அவதானம் இருப்பதால், அருகிலுள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சாலை மறித்த மண்மேடுகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.