ஹட்டன் பிரதான வீதியின் பிளக்பூல் சந்தியில் இன்று (27) அதிகாலை வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் வாகனம் 25 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
கினிகத்தேனவிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற ஜீப் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் வீதியை விட்டு விலகி 25 அடி பள்ளத்தில் விழுந்தது.வாகனத்தில் மூன்று பேர் இருந்த நிலையில், இருவர் படுகாயமடைந்து நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் விபத்து தொடர்பாக நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வகை விபத்துக்கள் முற்றிலுமாக தவிர்க்க வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.