யாழ்ப்பாணத்தில், இனம் தெரியாத 70-75 வயது மதிக்கத்தக்க வயோதிபரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அடையாளம் காண பொதுமக்களின் உதவியை யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது.
நேற்று (26) யாழ்ப்பாணம் கோப்பாய் சந்திக்கு அருகிலுள்ள கழிவு நீர் வடிகாலில் இருந்து உயிரிழந்த நிலையில் வயோதிபர் மீட்கப்பட்டார்.அருகிலுள்ள கடையின் கண்காணிப்பு கமராவில், வயோதிபர் வீதியில் நடந்து செல்வதும், திடீரென வடிகாலுக்குள் விழுவதும் பதிவாகியுள்ளது.கோப்பாய் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு, சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஒப்படைத்துள்ளனர்.
உயிரிழந்தவரை அடையாளம் காண முடியுமானால், உடற்கூற்று பரிசோதனை மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.முன்னர் காணாமல் போன நபர்கள் தொடர்பாக தகவல் உள்ளவர்கள், உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலை அல்லது கோப்பாய் பொலிஸாருடன் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் அல்லது கோப்பாய் பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.