இலங்கையில் நாளாந்தம் ஐந்து சிறுவர்கள் கொரோனா வைரஸ் நோயாளர்களாக அடையாளம் காணப்படுகின்றதாக லேடி ரிட்ஜ்வே வைத்தியாசாலை தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் இதுவரை 500 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
அத்துடன் கொவிட் 19 காரணமாக பத்து சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும்ம் அவர்கள் அனைவரும் கொவிட் 19 காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் உயிரிழந்தவர்கள் என மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் ஜி விஜயசூரிய தெரிவித்துள்ளார்.எனவே சுவாசப்பிரச்சினைகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் தங்களிற்கு பாதிப்பு ஏற்படாது என கருதுகின்றதாக தெரிவித்த அவர், வைரசினால் பாதிக்கப்பட்டமைக்கான ஆபத்தான அறிகுறிகளை ஒருவர் வெளிப்படுத்தாவிட்டாலும் உங்கள் உடம்பில் வைரஸ் நுழைந்தால் நீங்கள் நோயை பரப்புவராக விளங்க கூடும் என்றும், இதன் அர்த்தம் என்னவென்றால் நீங்கள் உங்கள் குழந்தைகளிற்கும் அருகில் உள்ளவர்களிற்கும் வைரசிஸ் தொற்றசெய்வீர்கள் என்பதே ஆகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.