பென் டங்க் மற்றும் ஷேன் வட்சன் ஆகியோரின் அற்புதமான இணையாட்டம், மற்றும் சேவியர் டோஹெர்டி ஐந்து இந்திய விக்கட்டுக்களை வீழ்த்தியமை காரணமாக அவுஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
இதில் பென் டங்க் மற்றும் ஷேன் வட்சன் ஆகியோர் முறையே 132 மற்றும் 110 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றதன் மூலம், அவுஸ்திரேலிய அணி, ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து 269 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் சார்பில் சச்சின் டெண்டுல்கர் 64 ஓட்டங்களை எடுத்த போதும், ஏனைய வீரர்களால் துடுப்பாட்டத்தில் பெரும் பங்களிப்பை வழங்க முடியவில்லை.
இந்திய துடுப்பாட்டத்துக்கு சவாலாக இருந்த சேவியர் டோஹெர்டி 25 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
இதனால் இந்திய அணி, இறுதியில் 95 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது.
எனினும், இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவுகளுக்கு அமைய, இந்திய மாஸ்டர்ஸ் அணி, 6 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் என்பன தலா 4 புள்ளிகளை பெற்றுள்ளன அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க மாஸ்டர்ஸ் அணிகள் தலா 2 புள்ளிகளை பெற்றுள்ளன. இங்கிலாந்து அணி புள்ளிகள் எதனையும் பெறவில்லை.