நிலவும் சீரற்ற வானிலையால் மலையக மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் பாதிப்படைந்துள்ளன.
இங்குருஓயாவிற்கும் கலபொடவிற்கும் இடையில் மரம் முறிந்து விழுந்துள்ளதாலும், பதுளைக்கும் ஹாலி-எலவுக்கும் இடையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மலையக மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தடைகளை அகற்றும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.