இலங்கை முப்படைகளில் இருந்து தப்பிச் சென்றுள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உத்தரவிட்டுள்ளார்.
அண்மைக்காலங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் உட்பட பல சட்டவரோத செயல்களில் முப்படையிலிருந்து தப்பிச் சென்றவர்கள் தொடர்புபட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

