திர்வரும் விடுமுறை நாட்களில் நாட்டை முடக்குவதற்கு எந்தவொரு தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என ஆரம்ப சுகாதார சேவைகள் தொற்று நோய்கள், கொரோனா வைரஸ் நோய்க்கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே (Sudarshani Fernandopulle ) தெரிவித்துள்ளார்.
மக்கள் கொவிட் தொற்றுடன் தமது இயல்பு வாழ்க்கையினை கொண்டு செல்வதற்கு பழக வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்தாலும், பாதிப்பு இன்னும் குறைவடையவில்லை. கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்ட பல நாடுகளில் டெல்டா கொரோனா வைரஸ் திரிபினால் பாதிப்பேற்பட்டுள்ளது.
கொவிட் தடுப்பூசி செலுத்துவதன் ஊடாக உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவதை போல் அன்றி, கிரமமான முறையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெறுவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே (Sudarshani Fernandopulle ) தெரிவித்துள்ளார்.