யாழ்ப்பாணத்திலிருந்து நண்பர்களுடன் கிளிநொச்சி – கெளதாரி முனைக்கு சுற்றுலா சென்ற இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நண்பர்களுடன் கெளதாரி முனைக்கு சுற்றுலா சென்று கடலில் குளித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மீசாலையைச் சேர்ந்த 30 வயதான தபாலக உத்தியோகத்தரே உயிரிழந்தவராவார்.கடலில் மூழ்கியவரை நண்பர்கள் மீட்டு பூநகரி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே இடையில் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.