அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீ அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக கனடிய தீயணைப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். சுமார் 150 தீயணைப்பு படை வீரர்கள் அமெரிக்கா பயணிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒன்றாரியோ மாகாண தீயணைப்புபடையினர் இவ்வாறு அமெரிக்காவிற்கு செல்ல உள்ளனர்.
கலிபோர்னியா மாநிலத்தில் கடுமையான காட்டு தீ அனர்த்தம் ஏற்பட்டு பெரும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
தீ அனர்த்தம் காரணமாக சுமார் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
நெருங்கிய நட்பு நாட்டுக்கு உதவி தேவைப்படுவதாகவும் அதற்கு உதவி செய்ய வேண்டும் எனவும் ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியாவின் நிலைமை மிகவும் மோசமாக காணப்படுவதாகவும் தீயணைப்பு படை வீரர்களின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்பட்டால் சுமார் 300 தீயணைப்பு படை வீரர்களை அனுப்பி வைக்க தயார் என போர்ட் தெரிவித்துள்ளார்.