2025 புத்தாண்டில் காலடி எடுத்து வைக்கும் போது பல புதிய வாய்ப்புக்களை சந்திக்க நேரிடும். இந்த புத்தாண்டை ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விதமாக கொண்டாடுகின்றனர்.
ஜப்பானில், ஓஷோகாட்சு என்று அழைக்கப்படும் புத்தாண்டு, புதிய தொடக்கங்களுக்கான நேரமாக கருதப்படுகிறது.
இந்த புத்தாண்டில் பௌத்த ஆலயங்கள், 108 பூவுலக ஆசைகளை களைய 108 முறை மணியை அடிக்கின்றன.
இதன்போது புத்தாண்டில் பாரம்பரிய உணவுகளான ஒசேச்சி ரயோரி போன்றவற்றை தயாரித்து தங்கள் வீடுகளை சுத்தம் செய்து புத்தாண்டை கொண்டாதுகிறார்கள்.
ஸ்காட்லாந்தின் ஹோக்மனே எனப்படும் கொண்டாட்டம் தனித்துவமான மரபுகளால் நிரம்பியுள்ளன என்றே சொல்லலாம்.
இந்த நாளில் நள்ளிரவுக்குப் பிறகு வீட்டிற்குள் நுழையும் முதல் நபர் கருப்பு முடி கொண்டவராக இருந்தால் அவர் அதிர்ஷ்டசாலி என்று கருதப்படுகின்றது.
பிரேசிலில் பலர் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காக வெள்ளை ஆடைகளை அணிந்து, ஏழு கடல் அலைகளுக்கு மேல் குதித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தபடி கொண்டாடுகின்றனர்.
அவர்கள் கடலின் ஆஃப்ரோ பிரேசிலிய தெய்வமான யெமஞ்சாவை நம்பிக்கையின் அடையாளமாக கருதி கடலுக்கு மெழுகுவர்த்திகள் மற்றும் பூக்களை வைத்து புத்தாண்டை வரவேற்கின்றனர்.
தென்னாப்பிரிக்காவில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் பழைய உபகரணங்கள் மற்றும் பொருட்களை இல்லாமல் செய்கின்றனர்.
இத புதிய ஆண்டில் புதிய வாய்ப்புகளுக்கான வழியைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது. இதனால் எதிர்காலத்தில் நேர்மறையான விடயங்களை கொண்டு வருத் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜெர்மனியில் புத்தாண்டை வரவேற்க ஈயத்தை உருக்கி குளிர்ந்த நீரில் ஊற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இது புதிய ஆண்டிற்கான சகுனங்களாக விளக்கப்படும் வடிவங்களை உருவாக்கும் என நம்பப்படுகின்றது