பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாத நாடுகளில் இருந்து இலங்கைவரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய தளர்வுகள் சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்ட சுற்றுலா பயணிகள் 7 நாட்களின் பின்னர் மீண்டும் பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நடைமுறை இன்று முதல் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இன்றுமுதல் இலங்கை வருகின்ற சுற்றுலாப் பயணிகள் தங்களது நாட்டில் பி.சி.ஆர் செய்தபோது அதில் தொற்று உறுதி இல்லை என்று உறுதிசெய்யபட்டால் இலங்கை வந்ததும் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டியதில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது