பேலியகொட பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பேலியகொடை கெமுனுமாவத்தையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்துள்ளார்.
குறிப்பிட்ட பெண் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸாருக்கு தாங்கள் தெரியப்படுத்திய போதிலும் பொலிஸாரின் அலட்சியம் காரணமாக அவர் உயிரிழந்ததாக குடும்பத்தவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.ஒரு தரப்பினர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இன்னொரு தரப்பினரை விசாரணைக்கு அழைத்த பொலிஸார் குறிப்பிட்ட பெண் உட்பட ஐவரை கைது செய்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
குறிப்பிட்ட பெண் தனது உடல் நிலை குறித்து அறிவித்த போதிலும் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.