மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில், காணாமல்போனவரின் உறவுகளால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போன குடும்பஸ்தர் தொடர்பில் மனைவி நேற்று (8) பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தில் வடமுனை, ஊத்துச்சேனையைச் சேர்ந்த 55 வயதுடைய சிவசுப்பிரமணியம் குருநாதன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே காணாமல் போயுள்ளார்.
கடந்த 5 ஆம் திகதி, மட்டக்களப்பு – திரும்பெருந்துறையில் உள்ள வாகனம் திருத்துமிடத்திற்கு தனது முச்சக்கரவண்டியை கொண்டு சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லையென உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்துடன் , அவரது தொலைபேசியின் தொடர்பும் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இவரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேடியும் எதுவித தகவலும் கிடைக்கவில்லையென உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காணாமல்போன குடும்பஸ்தர் தொடர்பில் கண்டவர்கள் தகவல் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது