ஜெர்மனியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெர்மனி நாட்டின் ஷுல்ட் என்ற நகரில் பெய்து வரும் கனமழையால் நேற்று இரவு முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் 6 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும், 25க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய பலரை ராணுவ உதவியுடன் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு வருகின்றனர். மேலும் இந்த அனர்தத்தில் சிக்கி இதுவரை 30 பேரை காணவில்லை என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.