அநுராதபுரம் – புத்தளம் வீதியில் முச்சக்கரவண்டியும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் அந்தரவெவ, கலயா மன்சந்திக்கு அருகில் நேற்றையதினம் (24-10-2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த 2 பிள்ளைகளின் தந்தையான 47 வயதான நொச்சியாகம, அடம்பனையைச் சேர்ந்த டி.சுமித் ரத்நாயக்க என்பவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தனது மகள், மகன் மற்றும் மகளின் நண்பரை பாடசாலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதில் பாடசாலை மாணவர்கள் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த விபத்தானது முச்சக்கரவண்டியின் மோதலை தவிர்க்க முற்பட்ட வேளையில் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள், எதிரே வந்த வேன் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது