வரும் ஓகஸ்ட் மாதத்தில் இருந்து இலங்கையில் மாடு அறுப்பு தடைச் சட்டம் அமுலுக்கு வரவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கான சட்டவரைபு தயார் நிலையில் இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த யோசனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சரவைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அதற்கான வரைபும் தயாரிக்கப்பட்டு தற்சமயம் நிறைவு நிலையை அடைந்திருப்பதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இன்னும் இரண்டே வாரங்களில் அந்த வரைபு நாடாளுமன்றத்திலும் சமர்பிக்கப்பட்டு, குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் சட்டமாக்கப்படும்.
அதன் பின்னர் இலங்கையில் மாடுகளை இறைச்சிகாக அறுப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.