சுழிபுரத்திலுள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் பகுதியினை முற்றுகையிடச் சென்ற பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை- சுழிபுரம், வறுத்தோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த தகவலுக்கமைய நேற்று (ஞாயிற்றுக்கிழமை), அப்பகுதியிலுள்ள வீட்டுக்கு† சென்ற பொலிஸாருக்கும் அங்கிருந்த பெண்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது அருகிலுள்ள வீட்டில் வசிக்கும் இளைஞன் ஒருவரும் சம்பவ இடத்திற்கு வந்தப்போது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள், அந்த இளைஞன்தான்† பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக கூறி, பொலிஸாருக்கு முன்னாலேயே அந்த இளைஞனை கொட்டனால் தாக்கினர்.
குறித்த சம்பவத்தினால் காயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில்† தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும்† சம்பவத்துக்கு காரணமான பெண்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட வேளையில் அவர்களது உறவினரான ஆண் ஒருவர், பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளார்.
இதனால் குறித்த ஆணையும் இளைஞனை தாக்கிய பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் அந்த பெண்ணின் வீட்டில் இருந்து 40 லீட்டர்கள் கோடாவும் ஒரு லீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.