அவுஸ்திரேலிய நாட்டில் இலங்கையர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்ததை அந்நாட்டின் உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
மெல்போர்னில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதி இலங்கைப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரது கணவரான இலங்கையரால் கத்தியால் தாக்கி அப்பெண் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதெவேளை, வழக்கில் தாம் கொலை செய்யவில்லை என்றும், தற்காப்புக்காகவே மனைவியை தாக்கியதாகவும் குறித்த இலங்கையர் நீதிமன்றத்தில் வாதாடி வந்துள்ளார்.
எனினும் அவர் கொலை செய்தமையை உயர் நீதிமன்ற விசாரணை மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து குறித்த வழக்கின் தீர்ப்பு நவம்பர் மாதம் 8ம் திகதி அறிவிக்கப்படும் என்று மெல்போர்ன் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.