இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (2024.08.27) நாணய மாற்று விகிதத்தை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றைய தினம் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296.36 ஆகவும் விற்பனைப் பெறுமதி 305.61 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 389.53 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 404.65 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 329.29 ஆகவும் விற்பனைப் பெறுமதி 342.96 ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 218.25ஆகவும் விற்பனைப் பெறுமதி 228.13ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198.92ஆகவும் விற்பனைப் பெறுமதி 209.11 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 225.31ஆகவும் விற்பனைப் பெறுமதி236.02 ஆகவும் பதிவாகியுள்ளது.