நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (26-08-2024) மீள ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் இவ்வாறு 3ஆம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளன.
2ஆம் பாடசாலை தவணை கடந்த வெள்ளிக்கிழமை (16-08-2024) முடிவடைந்ததுடன் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
இந்த நிலையில், 3ஆம் தவணை கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.