கல்கிசையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றிலிருந்து நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கல்கிசை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் நேற்று (23) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை, அநுராதபுரம், மாத்தளை மற்றும் கினிகத்தேனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25,34 மற்றும் 40 வயதுடைய நான்கு பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.