இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த 18 நாட்களில் 2,373 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 35,118 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
குறிப்பாக, மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் மேல் மாகாணத்தில் 14,359 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசியெ டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 16 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.