சுகாதார சீர்கேட்டை முன்னிட்டு மட்டக்களப்பு KFC விற்பனை நிலையம் நேற்று (18) அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய , சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார மருத்துவ பணிமனையின் அதிகாரிகளால் மட்டக்களப்பு KFC நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது .
இதன் போது உணவு பொருட்கள் உரிய முறையில் விநியோகிக்கப்படாமை, களஞ்சியப்படுத்தப்படாமை, கழிவு நீர் முகாமைத்துவம் சரியாக பேணப்படாமை உணரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குறித்த நிறுவனத்தின் மேல் நீதி மன்றத்தினால் வழக்கு தொடரப்பட்டு, எதிர்வரும் (22) திகதி வரை தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் , இனிவரும் காலங்களில் இவ்வாறு செயற்படும் உணவகங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை குறித்த KFC நிறுவனத்தில் துர்நாற்றமும் சுகாதார சீர்கேடுகளும், திருந்தும் வரை அங்கு செல்லாதீர்கள் என சமூக வலைத்தளத்தில் விசனம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.