கொழும்பு மாவட்டம் மாலம்பே, கஹந்தோட்ட வீதியில் உள்ள வீடொன்றில் விஷ வாயுவை சுவாசித்த இருவர் நேற்று முன்தினம் (13-08-2024) உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தற்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், குறித்த வீட்டிலிருந்த இரசாயனத்தைப் பயன்படுத்தி ஐஸ் ரக போதைப்பொருளைத் தயாரிக்க முயற்சி செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (14) பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினருடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த இடத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதேவேளை, அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் குறித்த வீட்டின் இரசாயனங்கள் இருந்த அறைக்குள் வந்து சோதனையிட்டதன் பின்னர், அந்த இரசாயனங்கள் ஐஸ் ரக போதைப்பொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுபவை என அடையாளம் கண்டதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.