அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்று வருகிற இல்மனைட் அகழ்வினைத் தடை செய்யக் கோரி திருக்கோவில் பிரதேச மக்களினால் கடந்த இரு வாரங்களாக கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
திருக்கோவில் பகுதியில் இல்மனைட் அகழ்வு இடம்பெற்று வந்த நிலையில் பிரதேச மக்களின் எதிர்ப்பின் காரணமாக பிரதேச அபிவிருத்திக் குழு மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தீர்மானங்களுக்கு அமைய தடை செய்யப்பட்டிருந்தது.
தற்போது அத்தீர்மானங்களை மீறி மீண்டும் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை அறிந்த மக்கள் இன்றைய தினம் அகழ்வு நடவடிக்கையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் திருக்கோவில் பிரதேச இல்மனைட் பிரச்சினைக்கு தற்காலிக தடை பெற்றுக்கொடுத்த திகாமடுல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மக்களுடன் கைகோர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.