தனமல்வில பொலிஸ் பிரிவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை ஒரு வருடமாக 17 பாடசாலை மாணவர்கள் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் அறிந்தும் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்த 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமி கல்வி கற்கும் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர் மற்றும் இரண்டு பெண் ஆசிரியர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.