திருகோணமலை – குச்சவெளி ஜாயா நகர் பிரதேசத்தில் இன்று பிற்பகலில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டைனமைட் என அழைக்கப்படும் வெடி பொருளை பயன்படுத்தி மூவர் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது குறித்த வெடி பொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் 26 வயது இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.
உயிரிழந்த குறித்த நபரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.