அண்மைய வேலை நிறுத்த காலத்தில் பணிக்கு சமூகமளித்த நிறைவேற்று தரத்திற்கு கீழ் உள்ள அனைத்து அரச ஊழியர்களுக்கும் விசேட கொடுப்பனவாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
அதன்படி வேலை செய்த அரச ஊழியர்களுக்கு ஒரு முறை உதவித்தொகையாக 10,000 ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த ஆலோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இவ்வாறான பாராட்டுக்கள் மூலம் எதிர்காலத்தில் நாட்டை முடக்கும் வேலைநிறுத்தங்களை தவிர்க்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

